Course Description
தற்சமயம் மனிதனின் வாழ்க்கையை மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் 20 வருடங்கள், படிப்பிலேயே போய் விடுகின்றது.இரண்டாவது 20 வருடங்கள் வேலை, தனக்கென ஒரு குடும்பம் மற்றும் நாம் நினைப்பதை சாதனை செய்ய வேண்டுமென்று ஓடுவதிலேயே காலம் கழிகின்றது.
மூன்றாவது 20 ஆண்டுகாலம் நம்மை முழுமையாக விழிப்படையச் செய்கின்றது. நாம் என்னதான் நினைத்தாலும் அது எல்லாமே அப்படியே நடப்பது இல்லை. எல்லாம் நடந்தாலும் அது நம்மை சந்தோசமாக வைத்துக் கொள்வது இல்லை. நாம் ஏதோ ஒன்றை நிச்சயமாக இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கின்றோம்.
நான் யார்? இந்த வாழ்க்கை ஏன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா? ஜோதிடம் பரிகாரம் என்பதெல்லாம் உண்மையா? என்ற பல கேள்விகள் நமக்கு எழும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விஞ்ஞான ரீதியான பதிலை நம் மனம் தேடுகின்றது. இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிப்பதே இந்த கற்க மறந்த பாடங்கள்.
நமக்கு ஒரு வழி காட்டுதலாக இந்த 19 பாடங்களும் இருக்கும். இதில் நம்மை உணர்வதற்கான பாடங்கள், நாம் தொழிலில் சிறந்து விளங்க வழிகாட்டுதல்கள், மற்றும் நம் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளும் பாடங்கள் ஆகிய அனைத்தும் உள்ளன. முதலில் இதில் உள்ள இலவச பாடங்களைப் பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பின் முழு பாடத்தையும் வாங்கி படித்து பயன் பெறுங்கள்.
முதலில் நாம் கற்றுக்கொண்டு பின் நம் பிள்ளைகளுக்கும் எடுத்துரைத்து அவர்களின் எதிர்காலம் சிறக்க ஆவன செய்வோம்.
நன்றி.